பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள ஈபிள் டவரில்
ஒலிம்பிக் வளையங்கள் இடம்பெற்றுள்ளன. வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், சுமார் 30 பணியாளர்களின் உதவியோடு மறுசுழற்சி செய்யப்பட்ட இரும்பினாலான மிக பெரிய ஒலிம்பிக் வளையங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் பொருத்தப்பட்டுள்ளது.