ஆசை மகளின் முதலாம் ஆண்டு நினைவு தினம்-தந்தை அதிரடி கைது-சட்டென வெடித்த போராட்டம்-பரபரப்பான ஈரான்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்த மாஷா அமினியின் தந்தை, தன் மகளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாஷா அமினியின் இறப்பால் அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன... கலவரங்கள் நடந்தன... 71 சிறார்கள் உட்பட உட்பட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்... நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன... 7 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டன... மாஷா அமினி இறந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அரசு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அவரது பெற்றோர் இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் தங்கள் மகளின் கல்லறையில் நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது... ஈரானின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் பல நகரங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன... இந்நிலையில் மாஷா அமினியின் தந்தை மகளின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கைது செய்யப்பட்டு, கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்...