கொரோனாவை போல உலகை தாக்க போகும் அடுத்த பெருந்தொற்று இதுதான்

Update: 2024-06-17 10:08 GMT

கொரோனாவை போல உலகை தாக்க போகும் அடுத்த பெருந்தொற்று இதுதான்.. 100 பேருக்கு உறுதியானால் 50 பேருக்கு மரணம் நிச்சயம்

கொரோனாவைப் போல உலகளவில் பரவும் தொற்று அதாவது அடுத்த பேண்டமிக்கானது பறவைக் காய்ச்சலில் இருந்து வரும் என அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சிகர கணிப்பைத் தெரிவித்துள்ளனர்...

Vovt

கொரோனாவில் இறப்பு விகிதம் 0.6 சதவீதமாக இருந்தது... ஆனால் பறவைக் காய்ச்சலைப் பொறுத்தவரை எங்காவது 20 முதல் 50 சதவீதம் வரை கூட இறப்பு விகிதம் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... பறவைக் காய்ச்சலின் H5N1 மாறுபாடு, அமெரிக்காவில் உள்ள கறவை மாடுகளிடையே பரவி வருகிறது. அதே சமயத்தில் 15 பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மனிதர்களிடையே வைரஸ் பரவுகிறதா என்பதற்கான ஆதாரம் இன்னும் இல்லை என்றாலும், Human receptor உடன் பிணைக்கும் தன்மையைப் பெற பறவைக் காய்ச்சலுக்கு 5 அமினோ அமிலங்கள் இருக்க வேண்டும்... இணைவு திறனைப் பெற்று விட்டால் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது... 

Tags:    

மேலும் செய்திகள்