சீனாவிலிருந்து சென்னை வந்த கப்பலில் இருந்ததை கண்டு அதிர்ச்சி.. மத்திய அரசுக்கு பறந்த அவசர தகவல்

Update: 2024-07-12 08:58 GMT

சீனாவில் இருந்து வந்த சரக்குக்கப்பலில் இருந்து கண்ணீர் புகை குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அமிலத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தான் நோக்கி செல்லும் சரக்கு கப்பல், கடந்த மே 8ஆம் தேதி சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கப்பலில் ஆய்வு செய்த போது, சுமார் 103 பேரல்களில், மொத்தம் 2,560 கிலோ எடையில், மிகவும் அபாயகரமான அமிலம் இருப்பது தெரியவந்தது. கண்ணீர் புகை குண்டுகள் தயாரிப்பதற்கு மூலப் பொருளாக இந்த அமிலத்தை பயன்படுத்துவார்கள் என தெரியவந்தது. மேலும், உரிய தகவல்களை தெரிவிக்காமல் சரக்கு கப்பல் சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அமிலத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திய அரசிடமும் இதுகுறித்து தகவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்