மோடி-ஜின்பிங் யதேச்சையான சந்திப்பால் எல்லையில் அரங்கேறிய திடீர் மாற்றம்
லடாக்கில் இரண்டு பகுதிகளில் இருந்து படைகளை இந்தியா- சீனா வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்தியாகம் செய்தனர். அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருநாட்டு உறவை மேம்படுத்த முடிவு எடுத்தனர். இந்நிலையில் லடாக்கின் டெம்சோக், செப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்களை இருநாடுகளும் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.