தாகெஸ்தானின் மிகப்பெரிய நகரமான மகச்சலாவிலும், கடலோர நகரமான டெர்பெண்டிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்துள்ளன... இதை பயங்கரவாத தாக்குதல் என ஆளுநர் செர்ஜி மெலிகோவ் சாடியுள்ளார்... இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை மகச்சலாவிலும், 2 பேரை டெர்பெண்டிலும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்... மேலும் இன்று முதல் 26ம் தேதி வரை தாகெஸ்தானில் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக குற்றவியல் விசாரணை துவங்கப்பட்டுள்ளது... இருப்பினும், தாக்குதல்களுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.