மீண்டும் பாக். பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் - உடனே ரியாக்ட் செய்த பிரதமர் மோடி
பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்...தேசிய சட்டமன்றத்தில் நடந்த வாக்குப்பதிவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்ட ஷெபாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்..