அடேங்கப்பா இந்த நாட்டுலயே இவ்ளோ வரவேற்பா? - பார்த்து அசந்துபோன மோடி
ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற 22 வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், அந்நாட்டு அதிபர் புதினையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து, 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஆஸ்திரியா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய தேசிய கொடிகளுடன் வரவேற்பு அளித்தனர். அப்போது, சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை பிரதமர் மோடியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தமது ஆஸ்திரியா பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இது ஒரு சிறப்பு வாய்ந்த பயணம் என்றும், அந்நாட்டு அதிபருடனான சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.