பாகிஸ்தான் இடைக்கால பிரதமரானார் அன்வார்-உல் ஹக் கக்கர்

Update: 2023-08-13 09:34 GMT

பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக B A P கட்சியைச் சேர்ந்த அன்வார்-உல் ஹக் கக்கர் (Anwaar-ul Haq Kakar) தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

பாகிஸ்தான் பாராளுமன்றம் கடந்த புதன் கிழமை கலைக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலப் பிரதமராக பலுசிஸ்தான் அவாமி (Balochistan Awami) கட்சியைச் சேர்ந்த அன்வார்-உல் ஹக் கக்கர் (Anwaar-ul Haq Kakar) தேர்வாகியுள்ளார்... புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும். இடைக்காலப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையை பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் நடத்திய நிலையில், அன்வார்-உல் ஹக் கக்கர் (Anwaar-ul Haq Kakar) பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு அந்நாட்டு அதிபரும் ஒப்புதல் அளித்த நிலையில், அன்வார்-உல் ஹக் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்பார்...

Tags:    

மேலும் செய்திகள்