அமெரிக்காவிற்குள் மூக்கை நுழைத்த ரஷ்யா? - ஒற்றை அறிவிப்பால் திரும்பிய உலக நாடுகளின் கண்கள்

Update: 2024-09-05 11:48 GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க வாக்காளர்களைக் குறி வைத்து ரஷ்யா தவறான ஆன்-லைன் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாக பைடன் நிர்வாகம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச செய்தி தொலைக்காட்சி நிறுவனமான RT, மற்றும் பிற ரஷ்ய அரசு ஆதரவு ஊடகங்கள், ஆன்-லைன் மற்றும் தொலைக்காட்சி நெட்வொர்க் மூலம் ரஷ்ய சார்பு கருத்துகளை மூளைச்சலவை செய்யும் வகையில் தவறான தகவல் தந்து ரகசிய பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க கருவூலத் துறை RT இன் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன் மற்றும் 9 ஊழியர்களுக்குத் தடை விதித்துள்ளது.

அமெரிக்க தேர்தல் நடைமுறை, உக்ரைனுக்கான ஆதரவு உள்ளிட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செய்தி பரப்ப RT செய்தி நிறுவனம் பல கோடிகளை செலவழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசு ஆதரவு ஊடக ஊழியர்களுக்கு விசா கட்டுப்பாடு விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்