தேவாலயத்தில் ஒருவரை மட்டுமே குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல்

Update: 2024-01-29 07:13 GMT

தேவாலயத்தில் ஒருவரை மட்டுமே குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல் - ஓரமாய் கதறி அழுத நபர்... அதிர்ச்சி சிசிடிவி

துருக்கியின் பண்பாட்டு நகரமான இஸ்தான்புல்லில் உள்ள தேவாலயம் ஒன்றில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... சாரியர் மாவட்டத்தில் உள்ள இத்தாலிய சாண்டா மரியா கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது... தாக்குதல் நடத்தியவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேறிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன... இத்தாக்குதலில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தாக்குதல் நடத்தியவர்கள் ஒருவரை நோக்கி மட்டுமே துப்பாக்கியால் சுட்டதாகவும் இஸ்தான்புல் கவர்னர் தாவூத் குல் தகவல் தெரிவித்துள்ளார்... தாக்குதலுக்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்