இந்திய -சீன வெளியுறவு அமைச்சர்கள் திடீர் சந்திப்பு - உக்ரைன் போர் குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ(Wang Yi), இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

Update: 2022-03-25 12:29 GMT
டெல்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ(Wang Yi), இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா படைகளுக்கு இடையே 2020ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நேற்று இரவு டெல்லி வந்தார். டெல்லியில் இன்று இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, வாங் யீ சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின் போது லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது, உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்