கின்னஸ் உலக சாதனையை முறியடித்த பாரம்பரிய ஹகா நடனம்

Update: 2024-09-29 20:06 GMT

நியூசிலாந்தில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஹகா நடனம் கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது. ஆக்லாந்தில் ரக்பி போட்டிக்கு முன்னதாக, தொடக்க விழா நடைபெற்றது. அப்போது, 6 ஆயிர 631 பேர் மைதானத்திற்குள் நின்று, மவோரிகளின் பாரம்பரிய போர்க்கலை நடனமான ஹகா நடனத்தை ஆடி கொண்டாடினர். 2014ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ரக்பி போட்டியின்போது 4 ஆயிரத்து 28 பேர் பங்கேற்றது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்த நிலையில், அந்த சாதனையை நியூசிலாந்தின் ஹகா நடனம் முறியடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்