நம்ம வீட்டு கிச்சன்ல அசத்தலான ஃபாரின் ரெசிபிய சமைக்க போறோம் சர்வதேச சமையல் பகுதில...

Update: 2024-09-29 09:23 GMT

புரட்டாசி மாசம் வந்தாலே... நடக்குறது, ஓடுறது, பறக்குறது, நீந்துறது, தாவுறதுனு அம்புட்டு அசைவ பிராணிகளும் குசியாகிடுவாங்க... இருந்தாலும் அசைவ பிரியர்கள கட்டு படுத்த முடியுமா..? சத்தியமா முடியாதுங்க... அதுனால நம்ம அசைவ பிரியர்களுக்காக பக்கத்து தெரு வரை வாசம் மனக்க... மனக்க... சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க இருக்கும் ரெசிபி... தாய்லாந்து மக்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கும் Crispy Fish Chilli Garlic Sauce....

தாய்லாந்துனு சொன்னதும்... உங்க மைன்ட்டு எங்க போகும்னு எனக்கு தெரியுது... அப்டிலாம் ஒன்னும் யோசிக்க வேணாம் இது கிட்ட தட்ட நம்ம ஊரு சமையல் மாதிரி தாங்க...

Crispy Fish Chilli Garlic Sauce சமைக்க தேவையான பொருட்கள்.... மீன், உப்பு, மிளகு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, எலுமிச்சை, அரிசி மாவு, கார்ன்பிளார் மாவு, சர்க்கரை, புளி கரைசல், எண்ணெய் அவ்வளவு தான்... இனி சமையலை ஸ்டார்ட் பண்ணிடலாம்....

இந்த ரெசிபில ரொம்ப முக்கியமான கேரக்டர்ரே... இந்த மீன் தாங்க... அதுனால காலங்காத்தாலயே மீன் மார்க்கெட்டுக்கு போய் ஒரு பெரிய சைஸ்ல... சதை நிறைஞ்ச முரட்டு மீனா பாத்து வாங்கிக்கோங்க...

அடுத்து மீனோட வயித்து குள்ள இருக்க குடல் குந்தானியெல்லாம் ரிமூவ் பண்ணிட்டு... நம்ம ரெசிபிக்கு ஏத்த மாத்தி நிராயுதபானியா மீனா ரெடி பன்னிக்கோங்க... இந்த ரெசிபில இருக்க ரொம்ப முக்கியமான விசயம் என்னனா... மீன எந்த பக்கம் கடிச்சாலும் மசாலா டேஸ்ட் வரனும்குறது தான்... அதுனால... மீனோட ரெண்டு பக்கத்துலயும்... கத்திய வச்சு சரட்டு சரட்டுனு ஒரு ஆறு கீறல்ல போட்டுக்கோங்கஅடுத்து ஒரு பல் பூண்டு, சின்னதா நறுக்குன இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்..... இது மூனுத்தையும் எடுத்து... மசால அரைக்குறதுக்குனு வீட்டுல குட்டி உரல் ஒன்னு வச்சிருப்பீங்கள... அதுல போட்டு நங்கு நங்குனு ஒரு ஸ்பூன் அளவுல அரைச்சு எடுத்துக்கோங்க... பிறவு ஒரு பாத்திறத்துல மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள்னு மூனுத்தையும் அறை ஸ்பூன் அளவுல போட்டு... கூடவே அரைச்சு வச்ச இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் போட்டு.... அதுலயே பாதி எழுமிச்சை பழம் சாற பிழிஞ்சு வுட்டுக்கோங்க.... நெக்ஸ்ட்டு அதை நல்லா பேஸ்ட் பதத்துக்கு மிக்ஸ் பண்ணி... அப்டியே எடுத்து... நம்ம மீனோட எல்லா பக்கமும் பூசி ஃபில் பண்ணனும்....

Tags:    

மேலும் செய்திகள்