ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறை - பலி எண்ணிக்கை 116 ஆகப் பதிவு

ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறையில் 116 பேர் உயிரிழந்த நிலையில், மோதலைத் துவக்கிய கைதிகளைத் தேடி வரும் அதிகாரிகள், சம்பந்தப்படவர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

Update: 2021-10-01 12:05 GMT
குவாகுயில் நகர சிறையில் கடந்த 28ம் தேதி இரு தரப்பு கைதிகளுக்கு இடையே வெடித்த மோதல் பலத்த வன்முறையாக மாறியது. இதில், ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் பலி எண்ணிக்கை 116 ஆக பதிவாகி உள்ளது. 400க்கும் மேற்பட்ட போலீசார் வந்த பிறகுதான் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஈகுவேடரில் செயல்பட்டு வரும் மெக்சிகோவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கட்டளையின் பேரில் மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தையடுத்து அந்த நாட்டில் உள்ள சிறைகள் அமைப்பில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோதலை ஆரம்பித்த குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அவற்றைப் பறிமுதல் செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இறந்த கைதிகளின் உடல்களை ஒப்படைக்க அவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணீர் மல்க கைதிகளின் உறவினர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.






Tags:    

மேலும் செய்திகள்