சீன அரசுடன் பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் - கொரோனா தடுப்பூசி விநியோகம்

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சினோவாக் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்குத் தயாராக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-01-05 14:17 GMT
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சினோவாக் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்குத் தயாராக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிறைய நாடுகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், தற்போது, எகிப்தில் இந்த தடுப்பூசி 4 கட்ட சோதனைகளுக்குப் பிறகு மிகவும் பாதுகாப்பானது என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் அரசு 12 லட்சம் தடுப்பூசிகளைப் பெற இருப்பதாகத் அறிவித்துள்ளது. மேலும் உகரைன், இந்தோனேசியா, துருக்கி, தாய்லாந்து, மெக்சிகோ, ஐக்கிய அரபு நாடுகளும் சீனத் தடுப்பூசியைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்