ஏடிஎம்மில் கார்டு போட்டு பணம் எடுப்பதை போல்.. `படுஜோராக நடக்கும் அந்த விற்பனை' - வைரலாகும் வீடியோ
சேலம் மாவட்டம் வாழப்பாடி நெடுஞ்சாலை ஓரம், நிழல் வலை ஓட்டை வழியாக மது விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஏடிஎம்மில் கார்டு போட்டு பணம் எடுப்பதை போல, மதுப்பிரியர்கள் வலை ஓட்டையில் பணத்தை கொடுத்து மது பாட்டிலை வாங்கிச் செல்கின்றனர். நிர்ணயித்த நேரத்தை தாண்டி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.