மாமல்லபுரத்தில் மாயமான மாணவர்கள் கதி என்ன?.. களமிறங்கிய மெரினா படை.. வெளியான அதிர்ச்சி தகவல்
மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆந்திர கல்லூரி மாணவர்களை ஆழ் கடல் நீர் மூழ்கி வீரர்கள் தொடர்ந்து 2வது நாளாகத் தேடி வருகின்றனர்...
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மற்றும் நலகாம்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 40 பேர் இருகுழுக்களாக மாமல்லபுரம் சுற்றுலா வந்த நிலையில் அவர்களில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்ச அலை 10 மாணவர்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது... மீனவர்கள் மணிமாறன், ராஜி ஆகியோர் சர்பிங் பலகையின் உதவியுடன் கடலில் நீந்தி சென்று 5 மாணவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்தனர்... நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டு இறந்த நலகாம்பள்ளியை சேர்ந்த என்ற மாணவர் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மாயமான பெத்துராஜ், ஷேசா ரெட்டி, மவுனீஷ், பார்த்தி ஆகிய 4 மாணவர்களை தீயணைப்பு துறையின் மீட்பு படையில் உள்ள ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் 7 பேர் ரப்பர் படகில் சென்று நேற்று இரவு முழுவதும் தேடியும் மீட்க முடியவில்லை... இன்று 2வது நாளாக மாணவர்களின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..