சென்னை NH-ல் குறுக்கே வந்த உருவம்.. BMW கார் அடித்த பிரேக்.. 10 பேருக்கு நேர்ந்த விபரீதம்

Update: 2024-09-14 03:01 GMT

வேலூர் அருகே, பூனை குறுக்கே வந்ததால், வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பூனை வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க, அந்த வழியாக BMW சொகுசு காரில் வந்தவர் திடீரென்று காரை நிறுத்தி உள்ளார். அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. அப்போது லாரியை பின்தொடர்ந்து வந்த பேருந்தும், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் மற்றும் காரில் வந்தவர்கள் என சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்