இன்ஸ்டாவில் வந்த லிங்க்... அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி - உஷார் மக்களே..!
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திர பிரசாத். ஐடி ஊழியரான இவர், பகுதி நேர வேலையாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து இணையத்தில் தேடி வந்த நிலையில், அது தொடர்பாக இன்ஸ்டாவில் வந்த லிங்க் ஒன்றை க்ளிக் செய்து, பங்குச்சந்தை தொடர்பான செயலி ஒன்றையும் பதிவிறக்கம் செய்திருக்கிறார். இதில், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிய கும்பல், பிரபல நிறுவனப் பெயரை பயன்படுத்தி அது தொடர்பாக வாட்ஸ் அப்பில் குரூப் ஒன்றையும் தொடங்கிய நிலையில், பங்கு சந்தை முதலீடு குறித்து வகுப்புகள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில், 8 பேரின் வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக சுமார் 18 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ததாகவும், நீண்ட நாள்களாகியும் எந்த ஒரு லாபத்தையும் திருப்பித்தராத கும்பல், பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக கூறிய பிரசாத், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.