மாணவர்களை அடித்து சென்ற பேரலை..சுற்றுலாவில் உயிரிழந்த சோகம் - கரையொதுங்கிய உடல்..4 பேர் மாயம்

Update: 2024-03-03 04:06 GMT

ஆந்திர மாநிலம், அனந்தபூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 40 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். கடற்கரைக்கு சென்று அவர்கள் குளித்த போது, கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 10 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கினர். சக மாணவர்கள் கூச்சலிட்டதால், மீனவர்கள் நீந்திச் சென்று 5 மாணவர்களை பத்திரமாக மீட்டனர். நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய் என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்ற 4 பேரை தேடுவதற்காக, சென்னை மெரினாவில் இருந்து, தீயணைப்புத்துறையின் ஸ்கூபா டைவிங் வீர‌ர்கள் களம் இறங்கினர். கரைப்பகுதியில் உள்ள பாறைகளின் இடுக்குகளில் மாணவர்களின் உடல் சிக்கியுள்ளனவா என்றும் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், ஆபத்தை உணராமல் மீண்டும் குளிக்க முயன்ற சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்

Tags:    

மேலும் செய்திகள்