ரயிலில் தீ விபத்து - 9 பேர் பலி மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் பலி... விதியை மீறி ரயிலில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதே விபத்திற்கு காரணம் என தகவல்... காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு... தெற்கு ரயில்வே சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு... விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய தெற்கு ரயில்வே போலீஸ் உத்தரவு...