``மத்த ஊர்ல இது பாலம்; சென்னைல இது பார்க்கிங்...'' நிரம்பி வழியும் மேம்பாலங்கள்... அசராத சென்னையன்ஸ்

Update: 2024-10-16 17:26 GMT

மழை எச்சரிக்கையால், சென்னையில் உள்ள மேம்பாலங்கள் பார்க்கிங் ஏரியாவாக உருமாறியுள்ள சூழலில், கார் உரிமையாளர்கள் சொல்வது என்ன ? மேம்பாலங்களின் தற்போதைய நிலை என்ன? என்பதை பார்க்கலாம் விரிவாக...

மழை அலர்ட் வெளியாகி தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்க... காரை எடுத்துக் கொண்டு மேம்பாலம் நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர் சென்னை வாசிகள்....

இதில் தியாகராய நகர் மேம்பாலம், பள்ளிக்கரணை மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம் ஆகியவை திடீர் பார்க்கிங் ஸ்பாட்டாக மாறின...

பிஎம்டபிள்யூ முதல் ஆடி வரையிலான ஆடம்பர கார்களும், நானோ முதல் கியா வரை சாதாரண கார்களும் பாலத்தில் அணிவகுக்கக் தொடங்கி விட்டன..

அதிலும் வேளச்சேரி மேம்பாலம் எந்த நேரமும் பரபரப்பான மேம்பாலமாக அறியப்பட்டது.... மேம்பாலங்களின் இரு புறமும், கார்கள் அணிவகுத்து நிற்க மல்டி லெவல் பார்க்கிங் போல் காட்சியளித்தது வேளச்சேரி மேம்பாலம்...

பெரும்பாலும் வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் காருடன் மேம்பாலத்தில் குவியத் தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு மழைக்கும் வேளச்சேரி மக்களின் தற்காலிக பார்க்கிங்காக மேம்பாலங்கள் செயல்படும் சூழலில், இதற்கு மக்களின் இடம்பெயர்தலை கட்டுப்படுத்தாததே முழுமுதற் காரணம் என்கின்றனர் பொதுமக்கள்....

அதே வேளையில், இது போன்ற சூழலால் போக்குவரத்து நெருக்கடி நிலவுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக 100 அடி சாலையில் உள்ள புதிய பாலத்தில் இருபுறமும் 600க்கும் மேற்பட்ட கார்களும், பழைய பாலத்தில் 400க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்தியுள்ளனர்.

நெருக்கடியான சூழலில், தனியார் மால்கள் உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் செய்ய வசதிகளை ஏற்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கலாம் என தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.. 

Tags:    

மேலும் செய்திகள்