ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 20 படுக்கைகள் கொண்ட கட்டண அறைகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.