தாலிக்கு தங்கம் திட்டம்..! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | TN Govt

Update: 2024-09-13 12:30 GMT

தாலிக்கு தங்கம் வழங்கும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில், 2017 முதல் 2021

வரை பயனாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை

தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் திருமண நிதியுதவி பெற

செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சித்திரா

என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். மத்திய, மாநில அரசுகள்

ஒதுக்கிய நிதி பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,

செப்டம்பர் 18க்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்