நாளை நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக வாடாமல்லி ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 100 ஆகவும், செவ்வந்தி 60 ரூபாயில் இருந்து 130 ஆகவும், பன்னீர் ரோஜா 50 ரூபாயில் இருந்து 100 ஆகவும் உயர்ந்துள்ளது.
தோவாளை மலர் சந்தைக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று காலை சுமார் 75 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் ஒரு சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தன.