தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 27 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சார்பில் மேல்முறையீடு செய்ப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கும் விஷயத்தில் பலரும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதுபோன்று வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, இழப்பீடு வழங்குவதில் குளறுபடிகளை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை பணியமர்த்த வேண்டும் என்றனர். அப்போதுதான் நில உரிமையாளருக்கு முறையான இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.