`டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம்' - வரும்.. ஜூன் 5 தேதி.. - உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-06-03 15:58 GMT

டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம்' - வரும்.. ஜூன் 5 தேதி.. - உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

யமுனை ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், டெல்லியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி மற்றும் குடிநீர் விநியயோகம் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீரை வீணக்கினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஒரு மாதத்துக்கு கூடுதல் நீரை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல்

செய்துள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள்

பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர்

அடங்கிய அமர்வு விசாாரித்தது. இந்த விவகாரத்துக்கு தீர்வு

காண ஹிமாசல பிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய

மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டத்தை

ஏன் கூட்டக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தலைநகரில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு காண

மேல் யமுனை நதிநீ்ர் ஆணையத்தை ஜூன் 5ஆம் தேதி

கூட்டவும், நிலவர அறிக்கையை ஜூ்ன் 6ஆம் தேதிக்குள்

தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்