நீலகிரி மாவட்டம் கூடலூரில், சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்த பெண் பணியாளர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக பெண்கள் தற்காலிகமாக பணியார்த்தப்பட்டு ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நாடுகானி எல்லை சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால், பெண் பணியாளர்களிடம் கேரள சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.