நாமக்கல் மாவட்டத்தை அதிரவிட்ட கொடூர சம்பவம் - மேலும் ஒருவர் அதிரடி கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டை காலி செய்ய மறுத்த மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஐயப்பன் நகரில் வசித்து வந்தவர் நாகரத்தினம். 65 வயது மூதாட்டியான இவர், விட்டை காலி செய்ய மறுப்பதாக கூறி வீட்டின் உரிமையாளரால் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில், வீட்டு உரிமையாளர் பொன்னுச்சாமி, அவரின் மகள் ராதா மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில், திருச்சி பொன்மலையை சேர்ந்த ராஜ்குமாரை மூதாட்டி கொலை வழக்கில் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.