கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் அண்மைக்காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பட்டப்பகலிலேயே யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை தொரப்பள்ளி பகுதியில் மக்னா யானை ஒன்று உலா வந்தது. தொடர்ந்து, தொடர்ந்து மண்வயல், புத்தூர் வயல், பகுதிகளில் இரண்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தின. மேலும், மார்த்தோமா நகர், ஏச்சம் வயல் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றை யானை ஒன்று நடமாடியதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் தஞ்மடைந்தனர். இதனிடையே யானையை கண்காணிக்க வந்த வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.