திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்காக கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிலையில், அதில் ஆங்காங்கே விரிசல் இருப்பது தெரியவந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த கூடுதல் கட்டடங்களில், ஆங்காங்கே விரிசல் இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.