தீபாவளிக்கு முன்நாளே சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு....
சென்னையில் இரண்டு இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது...
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் இன்றே பாட்டசுகளை வெடிக்க துவங்கி விட்டனர்...
அந்த வகையில் தலைநகர் சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் பாட்டசுகளை வெடிக்க துவங்கியதால் தற்போதே காற்றின் தரம் என்பது மோசமடைய துவங்கி உள்ளது...
சென்னையைப் பொருத்தவரை இரவு 9 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 125-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது....
அதிகபட்சமாக மணலியில் 229, ஆலந்தூரில் 213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்து உள்ளது...
அதேபோல் அரும்பாக்கத்தில் 119 என்ற தரக்குறியீடு அளவில் மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது...
கொடுங்கையூர் ராயபுரம் வேளச்சேரி பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
நேற்றைய தினம் தலைநகர் சென்னையில் சராசரியாக காற்று மாசு அளவு 90 ஆக பதிவாகி இருந்த நிலையில் தற்போது காற்று மாசு அளவு மிதமானதாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது அதாவது காற்றின் தர குறியீடு 1 125 வரை கணக்கிடப்பட்டுள்ளது .
அதிகபட்சமாக PM 2.5 மற்றும் PM 10 நுண் துகள்கள் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது