சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் போட்ட உத்தரவு.. அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-08-25 06:19 GMT

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 76 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரையும் கடந்த 2022ம் ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரித்து தீர்ப்பை ரத்து செய்ததுடன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர், செப்டம்பர் 11-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் - தினந்தோறும் விசாரித்து விரைவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், மறு விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்