தலைமை செயலகத்தில் இன்று.. தமிழகத்தை பரபரப்பாக்கிய விவகாரம்

Update: 2024-09-09 04:41 GMT

மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சை தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தனது விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளார்.

சென்னையில் அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது குறித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவிடம், விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், மூன்று நாட்களாக விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி, தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.

இரண்டு அலுவலர்களுமே, தங்களிடம் தலைமை ஆசிரியர்கள் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், தாங்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் தனது விசாரணை அறிக்கையை, இயக்குநர் கண்ணப்பன், தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதியிடம் இன்று அளிக்கிறார்.

இதன் அடிப்படையில் துறை ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்