ஓபிஜி குழுமம் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 8 கோடியே 38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ஓபிஜி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த 11 மற்றும் 12 தேதிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. இதில், ஓபிஜி குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் வீட்டில் இருந்து 8 கோடியே 38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி அடுத்த கட்டமாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.