தமிழகம் 50 சதவீத மின் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நிரப்பி வருவதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள மியூசிக் அகாடமியில், பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் சார்பில், நீடித்த வளர்ச்சி தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் பங்கேற்றார். அவர் பேசுகையில், தமிழக அரசு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தை ஊக்குவித்து வருவதாகவும், தமிழகம் சுமார் 50 சதவீத மின் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நிரப்பி வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் உற்பத்தியாகும் இருசக்கர மின் வாகனங்களில் 65 சதவீதம் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவதாகவும், தமிழகத்தில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், மின் வாகனங்கள் பதிவு செய்ய கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.