நடக்க போகும் மாற்றம் - தமிழக மக்களுக்கு குட்நியூஸ்

Update: 2024-10-20 17:15 GMT

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இன்று முதல் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி 3 ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட BS-VI சாதாரண பேருந்துகள் "விடியல் பயணத் திட்டத்தில்" இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்