உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

Update: 2024-02-15 15:33 GMT

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு மக்களாட்சியை மீட்டிருப்பதோடு, அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இது அமைப்பின் மீதான சாமானிய மக்களின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்