சென்னையில் திடீரென அங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் - என்ன காரணம் தெரியுமா?
சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் ஏராளமான புறநகர் ரயில்களும் , வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மீஞ்சூர் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை நோக்கி செல்லக்கூடிய தாதாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில் என 3 ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல் பொன்னேரி கவரைப்பேட்டை , கும்மிடிப்பூண்டி என சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்களும் ஆங்காங்கே நின்றன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனிடையே கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கத்தை முழுமையாக 4 வழி ரயில்
பாதையாக மாற்றிட வேண்டும் என ரயில் பயணிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.