பாக்கவோ அப்பாவி..பன்ற வேலையோ கில்லாடி..கொள்ளையில் ஈடுபட்ட சூப்பர் பேமிலி..
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 110 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நடராஜன், அவரது மனைவி லலிதா, மற்றும் மகன் நவீன்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் மூன்று பேரும் வாசுதேவநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இரவு நேரத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கூட்டாக சென்று கொள்ளையடித்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.