அந்தரத்தில் மிதந்தபடி அறுசுவை விருந்து.காற்றில் பறந்த படியே த்ரில் அனுபவம் - மிரளவிடும் ஸ்கை டைனிங்

Update: 2024-05-15 07:17 GMT

அந்தரத்தில் மிதந்தபடி அறுசுவை விருந்து

காற்றில் பறந்த படியே ஒரு த்ரில் அனுபவம்

பார்த்தாலே மிரளவிடும் ஸ்கை டைனிங்

பெங்களூருவில் அறிமுகமாகியுள்ள ஸ்கை டைனிங் ஹோட்டல், பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. என்ன ஸ்பெஷலிட்டி இந்த ஹோட்டலில் என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

ஹோட்டல், பீச், அவுட்டிங் என பிசியாக இருக்கும் இளசுகளுக்கென்றே பிரத்யேகமாக தீம் ஹோட்டல்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது..

அந்த வகையில் தற்போது உருவெடுத்துள்ளது ஸ்கை டைனிங்..

இக்கால இளசுகளை கவரும் வகையில், மங்களூரில் உள்ள பனம்பூர் கடற்கரையில் ஸ்கை டைனிங் என்ற புதிய உலகம் அறிமுகமாகி மக்கள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறது..

சுமார் 16 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில், ஒரு கேபின் வடிவமைக்கப்பட்டு..அதற்கேற்ப சீட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கேபினை கிரேன் உதவியுடன் 120 அடி உயரத்தில் நிறுத்தி..அங்கிருந்தே உணவருந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், உயரத்தில் நிற்கும் கேபினில் இருந்து பார்த்தால், எழில்மிகு மங்களூர் நகரின் அழகு ஒரு பக்கமும், மற்றொரு புறம் பரந்து விரிந்த கடலும் தெரிவதால்...இந்த ஸ்கை டைனிங்கிற்கு மவுசு கூடி வருகிறது.

மக்கள் எந்தளவிற்கு இந்த த்ரில் அனுபவத்தை நாடுகிறார்களோ அதே அளவிற்கு இதில் ஆபத்தும் இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால், சீட் ஸ்கை டைனிங் ஹோட்டலில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொண்ட பின்னரே, கிரேன் மூலம் கேபின் மேலே இழுக்கப்படுகிறது..

அத்துடன், தொழில்நுட்ப ஊழியர்களுக்கென தனி அறைகளும் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே வேளையில், இந்த புதுவித சாகச அனுபவத்திற்கு பட்ஜெட் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் பூனே, அகமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ஸ்கை டைனிங் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பெங்களூரில் அறிமுகமாகியுள்ள ஸ்கை டைனிங் தென்னிந்தியாவிலும் வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்