கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..வேளச்சேரி வாசிகளுக்கு வந்த பேரிடி | Chennai | Court
சென்னையின் முக்கிய ஏரியான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை தடுத்து நீர் நிலைகளை மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் கரையில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதை அடுத்து அதிகாரிகள் வீடுகளை அகற்றும் பணியை துவங்கியுள்ளனர். வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதற்கான பயோமெட்ரிக் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.