பயணியின் பையில் இருந்த `பொருள்'... அதிர்ந்த சென்னை ஏர்போர்ட்...

Update: 2024-11-25 10:53 GMT

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியா செல்லும் விமானத்தில் செல்ல வந்த ஆந்திரா கடப்பாவை சேர்ந்த ராமசந்திரன் என்ற பயணியின் கைப்பையில், ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்பது தெரிய வந்தது. விமான பாதுகாப்பு சட்டத்தின் படி, விமானத்தில் ஜிபிஎஸ் கருவியை பயணிகள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்தனர். மேலும் ராமசந்திரனின் விமான பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும் அவரையும் ஜிபிஎஸ் கருவியையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் பணிபுரியும் நிறுவனம் ஜிபிஎஸ் கருவியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்களை சமர்பிக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆவணங்களை ஒப்படைத்து விட்டு அவர் வேறு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்