அரசு மருத்துவமனையில் பாதுகாவலருக்கு நேர்ந்த கதி..உச்சகட்ட பதற்றத்தில் பொதுமக்கள் | Ramanathapuram
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலரின் வாக்கிடாக்கி மற்றும் நோயாளிகளின் செல்போன் உள்ளிட்டவை நள்ளிரவில் திருடுபோனதால் பரபரப்பு நிலவியது.
மகப்பேறு குழந்தை நல பிரிவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது உறவினர்கள் அந்த கட்டிடத்தில் உள்ள தரைதள பகுதியில் இரவு நேரத்தில் தங்கியிருப்பது வழக்கம்.
இந்நிலையில், நள்ளிரவில் அங்கு சுற்றித்திரிந்த அந்த மர்ம நபர்கள், பணியில் இருந்த பாதுகாவலரின் வாக்கி டாக்கி, நோயாளி ஒருவரின் உயர்ரக செல்போன், பணம் மற்றும் காலணிகளை திருடிச் சென்றுள்ளனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.