நெருங்கும் தீபாவளி... சிவகாசியில் குமுறும் பட்டாசு உற்பத்தியாளர்கள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் 20 சதவீத விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரவெடி உற்பத்திக்கும் விற்பனைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பட்டாசு பிரியர்கள், சரவெடியை தவிர்த்து மற்ற வெடிகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். ஆன்லைன் விற்பனை, கள்ளச்சந்தை விற்பனை உள்ளிட்ட பல காரணங்களால், பட்டாசு விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.