மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லத்தில் கொடூரம்... மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்... ஷாக் வீடியோ

Update: 2024-10-21 16:09 GMT

சிவகங்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இல்லத்தில் தவழும் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், விதியை மீறி 15 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பயிற்றுனராக இருக்கும் கோமதி என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண்ணை கம்பால் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அது பழைய வீடியோ என்று அந்த இல்லத்தின் நிர்வாகி புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்