சிங்கம்புணரி அருகே இருக்கும் கொள்ளுக்குடிபட்டி கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. பருவ காலங்களில் வெளிநாட்டு பறவைகள் வரும் கிராமத்தில் மக்கள் தீபாவளி, திருவிழாவில் பட்டாசு வெடிப்பது இல்லை. பறவைகளுக்காக பல தியாகங்களை செய்த கிராம மக்கள், கண்மாய் நிறைய நீர் இருந்தாலும் குடிப்பதற்கு 200 ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்கும் சூழலே இருப்பதாக தெரிவிக்கிறார்கள். கண்மாயில் பறவைகள் எச்சம் காரணமாக நீரை பயன்படுத்த முடியாத சூழலில், 4 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் இயங்காது பாழடைந்து கிடைப்பதாக சொல்லும் கிராம மக்கள், அதை சரி செய்து தர அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள்