கீழ்பாக்கத்தில் நடைபெற்ற, சென்னை சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், முரசு கொட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
திரைப்பட இசை அமைப்பாளர் பால் ஜேக்கப் வடிவமைப்பில், 250 கலைஞர்கள் பங்குபெற்ற பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன், தொடக்க விழாவே பிரம்மாண்டமாக களைகட்டியது.
ஒரு மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை, தனது மனைவியுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் கண்டுகளித்தார்.
பெரியார் குறித்த சர்ச்சை தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், பெரியாரின் புகழ் குறித்த பாடலை பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா பாட, கைத்தட்டல்கள் விண்ணை பிளந்தன.
இதற்கு இடையே, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலமாக திரையில் தோன்றி, சென்னை சங்கமம் நிகழ்ச்சியை பற்றி பேசினார். திரையில் கருணாநிதி தோன்றியதும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
((ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக கருணாநிதி பேசக்கூடிய காட்சி))
சென்னை சங்கமம் மிகவும் அருமையான நிகழ்ச்சி என கூறிய விழாவில் பங்கேற்ற கலைஞர்கள், பாரம்பரிய கலைகள் அழியாமல் இருப்பதற்கு இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியமென தெரிவித்தனர்.
பால் ஜேக்கப், இசையமைப்பாளர்
முத்தலிப், பொய்க்கால் குதிரை ஆட்ட கலைஞர்
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காகவே, சென்னை சங்கமம் நடத்தப்படுவதாக, திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
கனிமொழி, திமுக எம்.பி.
பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி கத்திப்பாரா, பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா உள்ளிட்ட 18 இடங்களில், வரும் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஆயிரத்து 500 கலைஞர்களின் பங்களிப்பில், ஆட்டம் பாட்டம் என பொங்கல் பண்டிகையை சென்னை வாசிகள் மகிழ்ச்சியோடு கொண்டாடலாம்....