குமரி மேலட்டுவிளையைச் சேர்ந்த நாராயணன் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மைய இயக்குநராக பதவி வகித்தார். மேலும் ககன்யான் திட்டத்திற்கான தேசிய அளவிலான சான்றிதழ் வாரிய தலைவராகவும் பணியாற்றினார்... இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய தலைவராக நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்தது. இதையடுத்து அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பிரியா விடை பெற்றார் சோம்நாத்...